தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு...!

In Tamil Nadu coastal districts and the districts adjoining the Western are likely to receive light rain with thunder and lightning for the next 5 days

தமிழகத்தில், கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில், அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு பெய்ய வாய்ப்பு.

தென் மேற்கு வங்கக்கடல், அதனையொட்டியுள்ள இலங்கை கடற் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில், கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில், இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு பெய்ய வாய்ப்பு.என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. நாளை தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால், ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதியில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.