அடுத்த இரண்டு தினங்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..!!

The Chennai Meteorological Department has forecast showers in the coastal districts and the northern coastal districts along the Western Ghats.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் , உள் மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை , காரைக்கால் பகுதியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் திருச்சி , கிருஷ்ணகிரி, வேலூர் , திருவள்ளூர், மதுரை ,  தர்மபுரி , திருப்பத்தூர் , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு, ராணிப்பேட்டை , சென்னை, திருவண்ணாமலை , விழுப்புரம் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி வரை செல்சியஸ் உயரக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும் எனவும் நகரின் சில பகுதியில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது .