தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..!!

The Chennai Meteorological Department has forecast showers with thunder and lightning in 4 districts in Tamil Nadu

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச்சலனம் காரணமாக, தேனி, நீலகிரி, திண்டுக்கல், கோயம்புத்தூர், ஆகிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் வருகின்ற 20 மற்றும் 21 தேதி வரை வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்றும்,  22ஆம் தேதி கோயம்புத்தூர், தேனி, நீலகிரி, திண்டுக்கல், மாவட்டங்கள் ஆகிய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.