5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!!

The Meteorological Department has forecast thundershowers in 5 districts of Tamil Nadu by this evening.

இன்று மாலைக்குள் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என்று கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது, இன்று மாலைக்குள் தமிழகத்தின் தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.