இந்த தேர்வுக்கான தேர்வு தேதி மாற்றம் – TNPSC அறிவிப்பு

2-ம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான மெயின் தேர்வு மே 6, 7 தேதிகளில் நடைபெறுவதாக இருந்த நிலையில், தேர்வு மே 7,8 தேதிகளில் நடைபெறும் TNPSC

2-ம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான மெயின் தேர்வு மே 6, 7 தேதிகளில் நடைபெறுவதாக இருந்த நிலையில், தேர்வு மே 7,8 தேதிகளில் நடைபெறும் TNPSC அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு பொதுப் பணியில் அடங்கிய இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்வுகள் 06.05.2022 (முற்பகல் மற்றும் பிற்பகல்) மற்றும் 07.05.2022 (முற்பகல் மற்றும் பிற்பகல் ) நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேற்படி முதன்மை எழுத்துத் தேர்வுகள் நிர்வாகக் காரணங்களால் தற்போது 07.05.2022 (முற்பகல் மற்றும் பிற்பகல்) மற்றும் 08.05.2022 (முற்பகல் மற்றும் பிற்பகல் ) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node