இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாமல் இருக்கும் வகையில் அமைய வேண்டும் என்று முதல்வருக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்.
போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கர் போக்குவரத்துத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். முதலமைச்சர் பரிந்துரையை ஏற்று ராஜகண்ணப்பன், சிவசங்கரின் துறைகளை மாற்றி தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். முதுகளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதி பெயரை கூறி பேசியதாக புகார் எழுந்த நிலையில், ராஜகண்ணப்பன் அதிரடி மாற்றம் செய்யப்பட்டார்.
முதல்வர் முக ஸ்டாலின் ஆட்சி அமைந்த பிறகு முதன் முறையாக அமைச்சர்களின் இலாகா மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் அரசு அதிகாரியை சாதியை குறிப்பிட்டு திட்டியது கண்டனத்திற்குரியது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அவர்கள் சாதிப் பெயரைச் சொல்லி திட்டியுள்ளதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தச் செயல் அரசு ஊழியர்களிடையேயும், பொதுமக்களிடையேயும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் அவர்கள், அமைச்சரின் இலாகாவை மாற்றி அமைத்தாலும், இந்த நடவடிக்கை சாதிப் பெயரைச் சொல்லி அரசு அதிகாரியை திட்டியதற்கு தீர்வாக அமையாது. முதலமைச்சர் அவர்கள் எடுக்கும் நடவடிக்கை இதுபோன்ற சம்பவங்கள் இனி வருங்காலங்களில் நடைபெறாது என்பதை உறுதி செய்யும் வகையில் அமைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…