சென்னை புளியந்தோப்பு பகுதியில் சாந்தி என்கிற பெண் வீட்டின் மேற்கூரை இடிந்து உயிரிழந்தார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெரும்பாலான பகுதிகளில் பெய்து வருகிறது. இதில் நேற்று முதல் சென்னையிலி அநேக இடங்களில் அதீத கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது.
சென்னை, புளியந்தோப்பு பகுதியில் சாந்தி என்ற 45 வயது மதிக்கத்தக்க பெண் இன்று விடியற்காலை, வீட்டின் முன் கோலம் போடுவதற்கு வந்துள்ளார். அப்போது கனமழையில் சேதமான மேற்கூரை இடிந்து அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
சம்பவம் அறிந்து தீயணைப்பு படையினர் வந்து மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். இதே போல நேற்று இரவு வியாசர்பாடி அருகே தேவராஜன் எனும் ஆட்டோ ஓட்டுநர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.