சென்னை :சென்னையின் பல்வேறு இடங்களிலும் இடி, மின்னலுடன் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. அதன்படி, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சோழவரம், திருத்தணியில் தலா 13 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது.
மேலும், திருவள்ளூர் -11 செமீ, பூண்டி, திருவாலங்காட்டில் தலா 10 செமீ, ஜமீன் கொரட்டூர் – 9 செமீ, தாமரைப்பாக்கம், ஆர்.கே.பேட்டையில் தலா 8 செமீ, பூவிருந்தவல்லி – 6 செமீ மழைப் பதிவாகியுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று விடிய காலை முதல் சென்னை, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், வேப்பேரி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, வளசரவாக்கம், கிண்டி, அடையாறு உள்பட பெரும்பாலான பகுதிகளில் விடிய விடிய இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
