சித்த மருத்துவ துறைக்கு குறைந்த நிதி ஒதுக்கியதால், ஆயுஷ் (AYUSH) அமைச்சகத்தின் பெயரிலிருந்து சித்த மருத்துவத்தை குறிப்பிடும் S எனும் எழுத்தை நீக்கி விடலாமா என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறி வீடியோ வெளியிட்டதற்காக சித்த மருத்துவர் தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சென்னை மாநகர காவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து அதனை ரத்து செய்ய சித்த மருத்துவர் தணிகாசலத்தின் தந்தை கலியபெருமாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான வழக்கு விசாரணையின் போது, சென்னை உயர்நீதி மன்றமானது இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், சித்தா, யுனானி உள்ளிட்ட மருத்துவ துறைகளுக்கு கடந்த 10 ஆண்டுகளில் ஒதுக்கிய நிதி பற்றி அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது.
நேற்று இந்த வழக்கு விசாரணையானது நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வின் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளில் ஆயுர்வேத மருத்துவ துறைக்கு 3000 கோடியும், சித்த மருத்துவ துறைக்கு 437 கோடியும் ஒதுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை கடுமையாக விமர்சிக்கும் வண்ணம் சென்னை உயர்நீதி நீதிபதிகள், ‘மத்திய அரசானது சித்த மருத்துவ துறையை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவது ஏன் எனவும், பிற துறைகளை விட சித்தமருத்துவ துறைக்கு குறைந்த நிதி ஒதுக்கியுள்ளது துரதஷ்டவசமானது எனவும் அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும், ஆயுஷ் (AYUSH) அமைச்சகத்தின் பெயரிலிருந்து S எனும் எழுத்தை நீக்கி விடலாமா என கண்டனம் தெரிவித்தனர். அதாவது, AYUSH அமைச்சகத்தில் உள்ள ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்கும் ஒவ்வொரு மருத்துவ துறை பெயர் குறிப்பிடப்படும். இதில் S எனும் வார்த்தை சித்த மருத்துவத்தை குறிப்பிடுவதாகும். இதனை குறிப்பிடும் வகையில் தான் S எனும் எழுத்தை நீக்கி விடலாமா என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், இது சம்பந்தமாக விளக்கம் அளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்று நீதிபதிகள் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.
லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக…
திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஆகஸ்டு 17) திருச்சியில் "மரங்களின் மாநாடு" நடத்தப்படும்…
கடலூர் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிதம்பரத்தில் தனது "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன்…
டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…
சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…
இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…