சென்னை பல்கலைக்கழக M.Phill தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு.!!

சென்னை பல்கலைக்கழக M.Phill தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் சென்னை பல்கலைக்கழகத்தில் M.Phill படிக்கும் மாணவர்கள் செமஸ்டர் தேர்வு நடைபெற்றது. மேலும், தேர்வு தாள் திருத்தப்படும் பணி முழுமையாக முடிந்துள்ள நிலையில், எப்போது தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் காத்திருந்தனர்.
இந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பதை சென்னை பல்கலைக்கழகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, நாளை M.Phill தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தேர்வு எழுதியவர்கள் நாளை http://unom.ac.in என்ற இணையதளத்திற்கு சென்று தேர்வு என் பிறந்த தேதி உள்ளிட்டவைகளை பதிவு செய்து உங்களுடைய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.