சென்னை வரும் தலைமை தேர்தல் ஆணையர்..!
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தற்போது தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை அவ்வப்போது நடத்தி வருகிறது.
அதிமுக, பாஜக இன்னும் தனது கூட்டணி குறித்து உறுதி செய்யப்படவில்லை. அதே நேரத்தில் திமுக, அதிமுக மற்றும் பாஜக சார்பில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை தயாரித்துக் குழு தமிழக முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடம் கருத்துக்களை கேட்டு வருகின்றனர்.
ஆளுநர் உரைக்கான பதிலுரை…. இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசப்போவதென்ன.?
இந்நிலையில் பிப்ரவரி 23-ஆம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தமிழ்நாடு வருகிறார். வருகின்ற பிப்ரவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தலைமை தேர்தல் ஆணையர் சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து தலைமை தேர்தல் ஆணைய ராஜீவ் குமார் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த ஆலோசனையில் நாடாளுமன்றத் தேர்தல் இறுதிக்கட்ட பணிகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அரசியல் கட்சிகள் , காவல் உயர் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உள்ளிடோரிடம் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடு பற்றி ஏற்கனவே தேர்தல் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்து விட்டு சென்ற நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் தமிழ்நாடு வருகிறார்.