28-ஆம் தேதி  மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

CM Palanisamy is scheduled to hold consultations with district collectors on the 28th on controlling the spread of corona disease.

கொரோனா நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் பழனிசாமி வருகின்ற 28- ஆம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர்களுடன் உடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக டிசம்பர் 1 முதல் டிசம்பர் 31 -ஆம் தேதி வரை பின்பற்றக் கூடிய புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. அதாவது,வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு, கட்டுப்பாட்டு பகுதிகள் மாவட்ட அதிகாரிகளால் கவனமுடன் வரையறுக்கப்படுவதை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் உறுதி செய்ய வேண்டும்.இந்தக் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆகவே டிசம்பர் மாத ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.அந்த ஆலோசனையில் ,தமிழகத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில் கொரோனாநோய்ப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அரசு மேலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது பற்றியும், தமிழக முதலமைச்சர் பழனிசாமி வருகின்ற28- ஆம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.