தமிழகத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

Chief Minister Mk Stalin inaugurated the 21-item Pongal Special Package Project.

21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 2.15 கோடி குடும்பங்களுக்கு ரூ.1,088 கோடி செலவில் பொங்கல் சிறப்பு தொகுத்து வழங்கப்பட உள்ளன. பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராச்சை, ஏலக்காய், நெய், கரும்பு போன்ற 21 பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

பொங்கல் சிறப்பு தொகுப்பில் உள்ள பொருட்கள்:

பச்சரிசி 1 கிலோ, வெல்லம் 1 கிலோ, முந்திரி 50 கிராம், திராச்சை 50 கிராம், பாசிப்பருப்பு 1/2 கிலோ, நெய் 100 கிராம், ஏலக்காய் 10 கிராம், மஞ்சள்தூள் 10 கிராம், மிளகாய்த்தூள் 100 கிராம், கடலைப்பருப்பு 1/4 கிலோ, மிளகு 50 கிராம், சீரகம் 100 கிராம், கடுகு 100 கிராம், புளி 200 கிராம், உப்பு 1/2 கிலோ, கோதுமைமாவு 1 கிலோ, மல்லுத்துள் 100 கிராம், ரவை 1 கிலோ, உளுத்தம்பருப்பு 1/2 கிலோ, கைப்பை ஒன்று, முழு கரும்பு ஆகியவை பொங்கல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.