விஜயகுமாரின் மரணம் தமிழக காவல்துறைக்கு பேரிழப்பு.! முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.!

கோவை சரக டிஐஜி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Tamilnadu CM MK Stalin - DIG Vijayakumar IPS

கோவை சரக டிஐஜி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தனது காவலாளி துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். தற்போது அவரது உடல் உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உயர் பதவியில் இருக்கும் காவல்துறை அதிகாரியின் தற்கொலை சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து தற்போது காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார் IPS, அவர்கள் இன்று அகால மரணம் அடைந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். திரு. விஜயகுமார் அவர்கள் தனது பணிக்காலத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிப் பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாடு காவல்துறைக்குப் பெருமை சேர்த்தவர். அவருடைய இந்த மரணம் தமிழ்நாடு காவல் துறைக்குப் பேரிழப்பாகும். அவருடைய குடும்பத்தாருக்கும் காவல்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். என தனது இரங்கலை பதிவிட்டு உள்ளார்.