கீழடியில் 8ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அகழ்வாராய்ச்சி பணிகளை தொல்லியல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 8 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன.
9ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் :
8ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் 2 வருடங்களாக நடைபெற்று கடந்த வருடம் அக்டோபரில் முடிந்தது. இதனை அடுத்து இன்று 9ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கீழடியில் தொல்லியல் துறையால் துவங்கிப்பட்டுள்ளன.
கீழ்நமண்டி :
இந்த கீழடியில் 2 ஏக்கர் பரப்பளவில் 9ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியையும், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டியில் முதற்கட்ட அகழ்வாராய்ச்சி பணியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி வாயிலாக துவங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில், தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு , தலைமை செயலர் இறையன்பு ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்வில் கீழடி குறித்த மொபைல் செயலியையும் முதல்வர் துவங்கி வைத்தார்.