சென்னையில் "டி.எம்.சௌந்தரராஜன் சாலை"...பெயர் சூட்டுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் நூற்றாண்டு விழாவை ஒட்டி, சென்னை மந்தைவெளியில் அவர் வாழ்ந்த வீடு அமைந்த சாலைக்கு 'டி.எம். சௌந்தரராஜன் சாலை' என்ற

புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் நூற்றாண்டு விழாவை ஒட்டி, சென்னை மந்தைவெளியில் அவர் வாழ்ந்த வீடு அமைந்த சாலைக்கு ‘டி.எம். சௌந்தரராஜன் சாலை’ என்ற பெயரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சூட்டுகிறார்.

இந்த நிகழ்ச்சி வரும் மார்ச் 24-ஆம்  தேதி சென்னையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. மேலும், இந்நிகழ்ச்சியில் டி.எம்.சௌந்தரராஜன் பாடிய பாடல்களை நினைவுகூரும் வகையில் இன்னிசைக் கச்சேரியும் நடக்கவுள்ளது.

பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜன். காதல், தத்துவம், சோகம், துள்ளல் என எல்லா வகை உணர்வுகளில் 10,000-க்கும் மேற்பட்ட பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இதில் சுமார் 3,000 பக்திப் பாடல்கள், அரசியல் கட்சிகளின் கொள்கைகளை உயர்த்திப் பிடித்த பாடல்கள் என 40 ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்து வந்தவர். இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு காலமானார் என்பது குறிப்பிடதக்கது.