சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 218-வது நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன், சேகர்பாபு, பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை.. அவர் நெஞ்சில் சுமந்ததோ அடக்குமுறைக்கு எதிரான எரிமலை.. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகத் தமிழ் மண்ணில் விடுதலைக் கனலை மூட்டிய ஓடாநிலைக் கோட்டையின் ஓங்குயர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவுநாளில் அவரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown node