நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (87). வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ட்வீட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” நடிகர் வடிவேலுவின் தயார் சரோஜினி அவர்கள் மதுரை விரகனூரில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
ஒரு மகனை ஆளாக்கி அழகு பார்த்த தாயாரின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடுசெய்ய இயலாத இழப்பாகும். ‘வைகைப் புயல்’ வடிவேலு அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
unknown nodeM. K. Stalins condolence on the death of Vadivelus mother Sarojini