கொரோனா தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

Visit to Chief Minister MK Stalin at the Corona Vaccination Camp in Chennai.

சென்னையில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு.

தமிழகம் முழுவதும் கடந்த வாரம் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் அதுவும் மாலை 5 மணிக்குள் 20 லட்சத்திற்கு மேலாக தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் அமைக்கப்பட்ட தடுப்பூசி முகாமிற்கு சோதனை செய்ய சென்ற முதல்வர், அங்கு பணியில் ஈடுபட்டியிருந்த மருத்துவர்கள் மற்றும் தடுப்பூசி செலுத்த வந்த பொது மக்களிடம் அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார்.

இதன் தொடர்ச்சியாக ஈகாட்டுதாங்கள் பகுதியில் அமைப்பட்டுள்ள முகாமையும் முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்து, அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். சென்னை மாநகராட்சியில் மட்டும் 1600 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்பது குறிப்பிடப்படுகிறதது.

இதனிடையே, தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியது என கூறப்படுகிறது. நேற்று வரை 3.96 கோடி பேர் செலுத்தி இருந்த நிலையில், இன்றைய தடுப்பூசி சிறப்பு முகாமில் இதுவரை 7.39 லட்சம் பேர் செலுத்தியுள்ளனர். இதன்படி தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியதாக தெரிவிக்கப்படுகிறது.