சாலையில் நின்றவருக்கு முகக்கவசம் அணிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

Chief Minister MK Stalin raised awareness by providing masks to the roadside public.

சாலையோர சென்ற பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்திய முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

தமிழகத்தில் ஓமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், மேலும் கூடுதலாக என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்பது குறித்து மருத்துவ வல்லுநர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டம் முடிந்து, வீட்டுக்கு புறப்பட்ட முதலமைச்சர் முக ஸ்டாலின், அண்ணா சாலையில் சென்றபோது சாலை யோரமாக காரை நிறுத்த சொல்லி, திடீரென முதலமைச்சர் காரைவிட்டு இறங்கி நடந்து சென்று பொதுமக்களுக்கு முக கவசங்களை வழங்கினார். இதுபோன்று ஓமந்தூரார் பன்நோக்கு மருத்துவமனை பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கிய, அனைவரும் தவறாமல் முகக்கவசத்தை அணிய வேண்டும் என அறிவுறுத்தினார்.

அப்போது சிலர் முக கவசம் அணியாமல் இருப்பதை பார்த்து அவர்களிடம் முக கவசம் வழங்கி அணிந்து கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறியது மட்டுமில்லாமல்  முகக்கவசம் அணிவதின் அவசியத்தை உணர்த்துவதற்காக, சென்னை சிம்சன் சந்திப்பில் முகக்கவசம் அணியாமல் நின்றிருந்தவருக்கு முதலமைச்சரே முகக்கவசம் அணிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாலையில் நின்றவருக்கு முகக்கவசம் அணிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!