இன்று பிற்பகல் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

Chief Minister MK Stalin's advice this afternoon as the northeast monsoon intensifies in Tamil Nadu.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று பிற்பகல் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த 11-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த நிலையில், தமிழநாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக வீடுகள் மற்றும் விளை நிலங்கள் பாதிப்பு அடைந்துள்ளன.

மழையால் பாதிக்கபட்ட இடங்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று பிற்பகல் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர், பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றன.

இன்று பிற்பகல் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!