இன்று மாலை மதுரை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு 3 நாள் பயணமாக இன்று மாலை மதுரை செல்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

Tamilnadu CM MK Stalin

மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு 3 நாள் பயணமாக இன்று மாலை மதுரை செல்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

மதுரையில் பிரபல பின்னணி பாடகர் T.M சௌந்தரராஜன் திருவுருவச் சிலை திறந்து வைக்கிறார். பின்னர், மதுரையில் உள்ள தனியார் உணவு விடுதியில் இரவு தங்குகிறார். இதனை தொடர்ந்து, நாளை காலை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ராமநாதபுரம் செல்கிறார்

முதலமைச்சர் வருகையையொட்டி மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் தென் மண்டல ஐஜி தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 18ம் தேதி மீண்டும் மதுரையில் இருந்து சென்னை திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்.