வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் விஜய்

வைகோ இல்லத்தில் 13 நிமிடம் நடந்து முடிந்த சந்திப்பிற்கு பிறகு ஒன்றாக வெளியே வந்து கையசைத்தபடி முதல்வர் விஜய் - வைகோ வெளியே வந்தனர்.

Hero Image

சென்னை : தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சரான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை இன்று அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் இல்லத்துக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு, வைகோவின் மகன் துரை வைகோ வெள்ளைத் துண்டு போர்த்தி மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றார்.

சந்திப்பின்போது முதலமைச்சர் விஜய் தொண்டர்களுக்கு உற்சாகமாக கையசைத்தபடி உள்ளே சென்றார். வைகோ இல்லத்தில் சுமார் 13 நிமிடங்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் உரையாடினர்.சந்திப்பு முடிந்ததும், முதலமைச்சர் விஜய் மற்றும் வைகோ இருவரும் ஒன்றாக வெளியே வந்து தொண்டர்களுக்கு கையசைத்து வரவேற்பு அளித்தனர்.

இந்தச் சந்திப்பு இரு தரப்பினரிடையேயும் நல்லிணக்கத்தையும், பரஸ்பர மரியாதையையும் வெளிப்படுத்தியதாக அரசியல் வட்டாரங்கள் பார்க்கின்றன.தவெக தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ள சூழலில், முக்கிய அரசியல் தலைவர்களை ஒவ்வொருவராக சந்தித்து வாழ்த்து பெறும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை முதல்வர் விஜய் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.