முதல்வரின் கொரோனா நிவாரண நிதி...! ரூ.50,000 நிதியுதவி அளித்த திருநங்கைகள்.....!

A total of Rs 50,000 has been sent to the Chief Minister's Relief Fund at the rate of Rs 1,000 per 50 transgender people from Chennai.

சென்னையை சேர்ந்த 50 திருநங்கைகள் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தமாக ரூ.50 ஆயிரம் ரூபாய் முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்திலும் இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொதுமக்களும், தொழில் நிறுவனங்களும் தடுப்புக் பணிகளுக்காக நிதி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனையடுத்து தமிழக முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், தொழில் நிறுவன பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சென்னையை சேர்ந்த 50 திருநங்கைகள் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தமாக ரூ.50 ஆயிரம் ரூபாய் முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளனர். திருநங்கைகளின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.