பிளஸ் 2 பொதுத்தேர்வுகளின் விடைத்தாள் திருத்துவோர் செல்போன் பயன்படுத்த தடை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில், விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது எனவும், அப்படி விடைத்தாள் திருத்தும் அறையில் செல்போன் கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும், இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் விடைத்தாள் திருத்தும் மையத்திற்குள் வெளி ஆட்கள் வருவதை தவிர்க்க வேண்டும் எனவும், அடிக்கடி வெளியில் செல்வது, காலதாமதமாக வருவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.