இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது.! மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.! 

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Tamilnadu CM MK Stalin

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நேற்று, ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற மீனவர்களில் 2 விசைப்படகு மீனவர்கள் மட்டும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நெடுந்தீவு அருகே, இலங்கை கடற்படையினர் 2 விசைபடகுகளோடு சேர்த்து 15 மீனவர்களை கைது செய்தனர்.

இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதை குறிப்பிட்டு, மீனவர்களின் வாழ்வாதாரமே இலங்கை – இந்திய கடல் எல்லைகளில் தான் இருக்கிறது. இந்த கைது நடவடிக்கையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனால், மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இரு நாட்டு பேச்சுவார்த்தை நடத்தி சாதகமான பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.