தேமுதிக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் -அமைச்சர் ஜெயக்குமார்

தேமுதிக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். Minister Jayakumar

மக்களவை தேர்தலில் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க ஒவ்வொரு கட்சியும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது.

தேமுதிக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக  பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.

ஆனால் அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக  கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது.

கடலூர் ,கள்ளக்குறிச்சி,தருமபுரி, ஆரணி, சிதம்பரம்,கிருஷ்ணகிரி, அரக்கோணம் ஆகிய தொகுதிகளை  அ.தி.மு.கவிடம் பாமக கேட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

unknown node

அதேபோல்  கடலூர்,கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, அரக்கோணம் ஆகியவற்றை தேமுதிகவும் கேட்பதாலேயே தொகுதி பங்கீடு முடியாமல் இழுபறி  நீடிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

பாமகவிற்கு இணையாக தேமுதிக தொகுதிகள் கேட்பதால் கூட்டணியில் சிக்கல் நீடிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

unknown node

இந்நிலையில் கூட்டணி தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  தேமுதிக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். ஒருமித்த கருத்துடன் தேர்தலை சந்திப்போம். அதிமுக கூட்டணி மகத்தான வெற்றிபெறும்.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் இன்னும் ரகசியமாக அதிமுகவிடம் பேச்சுவார்த்தையில் உள்ளது. திமுக-காங்கிரஸை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே அதிமுக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.