பைக் ஷோரூமில் தீ விபத்து.! பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பைக்குகள் எரிந்து நாசம்.!

கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு ஜாவா பைக் ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டு   7 பைக்குகள் முழுமையாக எரிந்து நாசம் ஆகியுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு ஜாவா பைக் ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டு   7 பைக்குகள் முழுமையாக எரிந்து நாசம் ஆகியுள்ளது.

கோவை மாவட்டத்தில் அவிநாசி சாலையில் ஜாவா பைக் ஷோரூம் ஒன்று இருக்கிறது. இந்த பைக் ஷோரூமில் நேற்று நள்ளிரவு எதிர்பாராத விதமாக திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயையை அணைத்தனர்,

திடீரென ஏற்பட்ட இந்த தீவிபத்தில் ஷோரூமில் இருந்த 7 பைக்குகள் முழுமையாக எரிந்து நாசம் அடைந்துள்ளது. மேலும் இந்த தீ எப்படி பற்றிக்கொண்டது என்பது குறித்து  போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.