கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : 3 பேரை சுட்டுப்பிடித்த போலீசார்!

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குணா, சதீஷ், கார்த்திக் ஆகிய 3 பேர் சுட்டுப்பிடிக்க பட்டுள்ளனர்.

Kovai Issue rape

கோவை :விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிரிந்தவற்றில், நேற்று முன்தினம்இரவு ஒரு கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, மூன்று இளைஞர்கள் திடீரென்று வந்து, ஆண் நண்பரை தாக்கி விரட்டினர். பின்னர், மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடினர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வன்கொடுமைக்கு ஆளான மாணவி, காயங்களுடன் தவித்த நிலையில், அவரது ஆண் நண்பர் உடனடியாக பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து, மாணவியை மீட்டு, உடனடியாக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மாணவியின் உடல்நிலை நலமாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.ஆண் நண்பரும் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

இதனையடுத்து, சம்பவம் நடந்த காரை போலீசார் மீட்டு, அதில் உள்ள ஆதாரங்களை சேகரித்து விசாரணை நடத்தி வந்தனர். மூன்று இளைஞர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்தது. சம்பவத்திற்குப் பிறகு, காவலர் சந்திரசேகர், குற்றவாளிகளைப் பிடிக்க முயன்றபோது, அவர்கள் அரிவாளால் தாக்கி தப்பினர்.

சந்திரசேகர், காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குற்றவாளிகள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த குணா, சதீஷ், கார்த்திக் என்ற மூன்று இளைஞர்கள் என சுட்டு பிடிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாணவியின் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.