கோவை த.வெ.க பூத் கமிட்டி கருத்தரங்கு – விஜய் பங்கேற்பு.!
கோவையில், வரும் 26 மற்றும் 27ம் தேதி நடைபெறவுள்ள த.வெ.க. பூத் கமிட்டியில் தேர்தலுக்கான களப்பணிகள் குறித்து கட்சித் தலைவர் விஜய் உரையாற்ற உள்ளார்.

கோவை : கோவையில் வரும் 26, 27ம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சி தலைமை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்தரங்கில் த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்கிறார். சட்டமன்ற தேர்தலுக்கான களப்பணிகள் குறித்து பூத் கமிட்டி கருத்தரங்கில் த.வெ.க தலைவர் விஜய் உரையாற்ற உள்ளார்.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில், ”கோவை குரும்பாளையம் SNS கல்லூரி வளாகத்தில் 2 நாட்கள் நடைபெறும் கூட்டத்தில் முதல் நாளில் 10 கழக மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும், இரண்டாம் நாளில் 13 கழக மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும் பங்கேற்பார்கள்.
இந்தக் கருத்தரங்கில், நம் வெற்றித் தலைவர் கலந்துகொண்டு, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான செயல்பாடுகள் குறித்தும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகள் குறித்தும், அது தொடர்பாகக் கழகம் சார்ந்து நாம் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்தும் விளக்கவுரை ஆற்ற உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியில், ”ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற உள்ள நம் வெற்றித் தலைவர் கரங்களுக்கு வலுச் சேர்ப்போம். வாகை சூடுவோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025