தமிழகத்தில் அடுத்த ஆட்சி கம்மியூனிஸ்டா...?ஆண்டவன் உத்தரவு பெட்டியில் ஆண்டவன் உத்தரவா...???

தமிழகத்தில் அடுத்த ஆட்சி கம்மியூனிஸ்ட் ஆட்சி நடைபெறுமா...?என்ற கேள்வியை சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் சன்னிதானத்தில் உள்ள ஆண்டவன் உத்தரவுப்பெட்டி

தமிழகத்தில் அடுத்த ஆட்சி கம்மியூனிஸ்ட் ஆட்சி நடைபெறுமா…?என்ற கேள்வியை சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் சன்னிதானத்தில் உள்ள ஆண்டவன் உத்தரவுப்பெட்டி தெரிவிக்கிறதா…..

unknown node

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பக்கத்தில் உள்ள சிவன்மலை மீது சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில்  சன்னிதானம் உள்ளது அதில் ஆண்டவன் உத்தரவுப்பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது.இந்த பெட்டியில் சிவன்மலை ஆண்டவன் தன்னுடைய பக்தர் ஒருவரின் கனவில் வந்து ஒரு குறிப்பிட்ட பொருளை கூறுவதாகவும் பின்னர் அவர்கள் கனவில் வந்த பொருளை கோவிலில் தெரிவித்ததும் கோவில் நிர்வாகம் சார்பில் சன்னிதானத்தில் சிவப்பு, வெள்ளை என்ற 2 பூக்கள் வைத்து சிவன்மலை சாமியிடம் உத்தரவு கேட்கப்படும்.

unknown node

இதில் வெள்ளை பூ வந்தால் மட்டுமே பக்தர் கனவில் வந்த அந்த பொருள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆண்டவனால் குறிப்பிட்ட அந்த பொருள் ஆண்டவன் உத்தரவுபெட்டியில் வைக்கப்பட்டு தொடர்ந்து தினமும் பூஜை செய்யப்படும். கனவை உறுதிப்படுத்தவே இந்த சோதனையாம் அப்படி வந்த அந்த பொருளை ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் வைத்து பூஜை செய்யும்படி ஆண்டவன் உத்தரவிடுவார். தினமும் அந்த பொருளுக்கு பூஜை செய்யப்படும்.

unknown node

இவ்வாறு இந்த ஆண்டவன் உத்தரவுபெட்டியில் இதுவரை ஏர் கலப்பை, தங்கம், ரூபாய் நோட்டு, துப்பாக்கி, மண், ஆற்று மணல், தண்ணீர், உப்பு, பூமாலை, துளசி,உலக் உருண்டை உள்ளிட்ட 100-க்கும் அதிகமான பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்ட நிலையில்கடந்த மாதம் செப்டம்பர் 17-ந்தேதி முதல் ஆண்டவன் உத்தரவின் பேரில் செம்மண் வைத்து பூஜை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதில் அதியசம் என்னவென்றால் அவ்வாறு வைக்கப்படும் பொருள்கள் தொடர்பாக உலகத்தில் மாறுதல் ஏற்படும் என்பது கண்கூடு.இந்த உத்தரவு பெட்டியில் தம்ளரில் தண்ணீர் வைக்கப்பட்டபோது சென்னை உள்ளிட்ட அமெரிக்கா போன்ற நாடுகளில் வெள்ளம் ஏற்பட்டதாகவும் மன் வைத்த போது மனல் தட்டுபாடு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் நேற்று முதல் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்ட செம்மண் அகற்றப்பட்டு 3 கதிர் அரிவாள் வைக்கப்பட்டு  பூஜை செய்யப்பட்டது.இந்த கதிர் அருவாளை திருப்பூர் மாவட்டம் குண்டடம் சுங்கிலியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி பி.வேலுச்சாமி (வயது 80) என்பவர் சிவன்மலை முருகன் தனது கனவில் வந்தாகவும் அவர் கதிர் அருவாளை உத்தரவு பெட்டியில் வைக்க வேண்டும் என்று கூறியதாக கூறினார்.அவர் கூறியதை ஏற்று சிவன்மலை கோவில் நிர்வாகம்  பூ போட்டு பார்த்தது அதில் கதிர் அரிவாள்கள் வைக்க வேண்டும் என்று ஆண்டவனின் உத்தரவின் பெயரில் ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் வைக்கப்பட்டு அதற்கு பூஜை செய்யப்பட்டது.

unknown node

இந்த உத்தரவு  குறித்து மக்கள் தெரிவிக்கையில் சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் எந்த ஒரு பொருட்களும் சமுதாயத்தில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கதிர் அறுக்கும் அரிவாள் 3 வைக்கப்பட்டுள்ளது. இந்த கதிர்அருவாள் கம்மியூனிஸ்ட் ஆட்சியா தமிழகத்திலா அல்லது விவசாயம் நன்குசெழிக்குமா என்று மக்கள் மத்தியில் குழப்பம் எழுந்துள்ளது.

unknown node

DINASUVADU