சூரப்பா மீதான புகார் – நோட்டீஸ் அனுப்ப முடிவு

Following a series of complaints against Surappa, the inquiry commission set up to look into the complaints has decided to send notices.

சூரப்பா மீதான புகார்கள் தொடர்ச்சியாக வந்த நிலையில் ,புகார்கள் மீது விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணைக்குழு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது.

அரியர் தேர்வுகள் ரத்து மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பா அதிருப்தி தெரிவித்திருந்தார்.குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் செய்ததாக புகார்கள் எழுந்தன.இது தொடர்பாக அவர் மீது புகார்கள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டது.

எனவே சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக்குழுவை அமைத்தது தமிழக அரசு .மேலும் மூன்று மாதங்களில் இந்த விசாரணைக்குழு அறிக்கை அளிக்கவும் அரசு உத்தரவிட்டது.சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க விசாரணை ஆணைய நீதிபதி கலையரசன் பொறுப்பேற்றார்.

இந்நிலையில் நீதிபதி கலையரசன்  கூறுகையில்,அடுத்த வாரம் துணை வேந்தர் சூரப்பா மீது ஊழல் புகார் தெரிவித்தவர்களுக்கு  நோட்டீஸ் அனுப்பப்படும்.பின்பு தனித்தனியாக அவர்களிடம்  விசாரணை நடத்தப்படும்.புகாரின் பேரிலே சூரப்பா மீதான அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.மேலும் இவ்விவகாரம் தொடர்பாக  நாளை முதல் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.