கோடநாடு விவகாரத்தில் அரசின் நல்லபெயரை கெடுக்கதிட்டமிட்டு சதி -அமைச்சர் ஜெயக்குமார்

கோடநாடு விவகாரம் பற்றி வெளியானதகவல்கள் அனைத்தும் கற்பனையே என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கோடநாடு விவகாரம் பற்றி வெளியானதகவல்கள் அனைத்தும் கற்பனையே என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், கோடநாடு விவகாரத்தில் அரசின் நல்லபெயரை கெடுக்கதிட்டமிட்டு சதி செய்யப்பட்டுள்ளது. முதல்வருக்கு கெட்டபெயரை ஏற்படுத்த உள்நோக்கோடுசதி அரங்கேறியிருக்கிறது. கோடநாடு விவகாரம் பற்றி வெளியானதகவல்கள் அனைத்தும் கற்பனையே.

கோடநாடு விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது, பிரச்னை எழுப்ப காரணம் என்ன? என்றும்  காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வதந்தியை பரப்பியவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.