காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியில் இன்று அல்லது நாளை வெளியாகும்

This news gives information about Congress candidates will be released today or tomorrow-congress vetpalarkalai pattiyal entru nalai veliyagum

காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளுக்கு 250 மேற்பட்ட வேட்பாளர் விருப்பமனு அளித்து உள்ளனர்.

குறிப்பாக கன்னியாகுமாரி தொகுதியில் 50 மேற்பட்ட வேட்பாளர் விருப்பமனு அளித்து உள்ளனர்.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.மக்களவை தேர்தல்  தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் தி.மு.க கூட்டணியில்  காங்கிரஸ் -மதிமுக – விசிக – மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் – இந்திய கம்யூனிஸ்ட் – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -ஐஜேகே ஆகிய கட்சிகள் உள்ளது.மேலும் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விபரம்  வெளியானது.

மக்களவை தேர்தலையொட்டி இன்று திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

இந்நிலையில்  தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை இன்று அல்லது நாளை வெளியிடுவேம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே .எஸ் அழகிரி கூறியுள்ளார்.

மேலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளுக்கு 250 மேற்பட்ட வேட்பாளர் விருப்பமனு அளித்து உள்ளனர், குறிப்பாக கன்னியாகுமாரி தொகுதியில் 50 மேற்பட்ட வேட்பாளர் விருப்பமனு அளித்து உள்ளனர்.