இன்று காங்கிரஸ்  தலைவர் ராகுல்காந்தி தமிழகம் வருகை! பிரச்சாரத்தில் பங்கேற்பு

Congress leader Rahul Gandhi visits today Participate in the campaign

இன்று (ஏப்ரல் 12 ஆம் தேதி) காங்கிரஸ்  தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வருகிறார்.

தமிழகத்தில்  மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.தேர்தலை யொட்டி தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் , வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர்.

அதேபோல் வேட்பாளர்கள் கடந்த சிலநாட்களாக  வேட்புமனு தாக்கல் செய்தனர்.பின்னர் வேட்புமனு மீதான பரிசீலனையும் செய்யப்பட்டது.ஆனால் இது ஒருபுறம் மறுபுறம் தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில்  காங்கிரஸ், மதிமுக , விசிக, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி , ஐஜேகே  ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றது.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 12 ஆம் தேதி) காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வருகிறார்.தேனீ, கிருஷ்ணகிரி,திருப்பரங்குன்றம்  சேலம் ஆகிய இடங்களில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.