தேர்தல் குழுக்களை அமைத்து  காங்கிரஸ் தலைமை உத்தரவு !!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் குழுக்களை அமைத்து  காங்கிரஸ் தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.அதில்  கே.எஸ்.அழகிரி தலைமையில் 22 பேர் கொண்ட தேர்தல் குழுவை

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் குழுக்களை அமைத்து  காங்கிரஸ் தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.அதில்  கே.எஸ்.அழகிரி தலைமையில் 22 பேர் கொண்ட தேர்தல் குழுவை அமைத்தது காங்கிரஸ். தேர்தல் குழுவில் ப.சிதம்பரம், மணிசங்கர் ஐயர், கே.ஆர்.ராமசாமி, குஷ்பு உள்ளிட்டோர் உள்ளனர்.

திருநாவுக்கரசர் தலைமையில் 35பேர் கொண்ட தேர்தல் பரப்புரை குழுவை அமைத்தது காங்கிரஸ். தேர்தல் பரப்புரை குழுவில் ஜே.எம்.ஹாரூன், குஷ்பு, விஜயதரணி, அப்ஸரா ரெட்டி உள்ளிட்டோர் உள்ளனர்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைமையில் 14பேர் கொண்ட தேர்தல் ஒருங்கிணைப்புக்கு குழு அமைத்தது காங்கிரஸ். தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் திருநாவுக்கரசர், குமரி அனந்தன், தனுஷ்கோடி ஆதித்யன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் 35பேர் கொண்ட ஊடக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு ஊடக ஒருங்கிணைப்புக் குழுவில் கோபண்ணா, அமெரிக்கை நாராயணன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக மோகன் குமாரமங்கலம் நியமனம்