சிறு-குறு தொழில் நிறுவனங்களின் தொடர் கோரிக்கை... மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம்.!

கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் தமிழக மின்சாரத்துறை சார்பில், தொழிற்சாலை மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் கிலோ வாட் கணக்கில் பயன்படுத்துவருக்கு யூனிட் 35

Featured image

கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் தமிழக மின்சாரத்துறை சார்பில், தொழிற்சாலை மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் கிலோ வாட் கணக்கில் பயன்படுத்துவருக்கு யூனிட் 35 இல் இருந்து 153ஆக உயர்த்தப்பட்டது. இந்த மின் கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என சிறு குறு தொழிற்சாலை நிறுவனர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஏற்கனவே இம்மாத தொடக்கத்தில் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட சிறு குறு தொழிற்சாலை நிறுவன நிறுவனர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கடிதங்கள் வாயிலாகவும் மின் கட்டணத்தை குறைக்க தமிழக முதல்வருக்கு தொடர் கோரிக்கை வைத்தனர்.

இதனை தொடர்ந்து இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தை தமிழகம் முழுவதும் உள்ள சிறு குறு தொழிற்சாலை நிறுவனங்கள் ஏற்கனவே அறிவித்து இருந்தன. அறிவித்தது போல இன்று இந்த போராட்டம் தொடங்கியுள்ளது. அதன்படி  சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி,கிருஷ்ணகிரி,  மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள சிறு குறு தொழிற்சாலை நிறுவனங்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தை தங்கள் தொழிற்சாலை கதவை மூடி ஆரம்பித்து உள்ளன.

சிறு குறு தொழிச்சாலைகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் என்னவென்றால், 430 சதவீதம் உயர்த்திய நிலை கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், பராமரிப்பு நேர கட்டணமான பீக் ஹவர் (peak hour) கட்டணம் நீக்கப்பட வேண்டும்.

பீக் ஹவர் கட்டணம் என்பது காலை 6 மணி முதல் 10 மணிவரை 15 சதவீத கூடுதல் கட்டணமும்,  மாலை 6 மணி முதல் 10 மணிவரை 20 சதவீத கட்டணமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. 12 கிலோ வாட் கீழே பயன்படுத்தும் நிறுவனங்களை மின் இணைப்பு 3b யிலிருந்து 3b1-க்கு மாற்ற வேண்டும்.  சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை சிறு குறு தொழிச்சாலைகள் முன்வைத்து இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் துவாக்குடி, திருவெறும்பூர், வாழவந்தான் கோட்டை , கும்பக்குடி பகுதிகளில் உள்ள 2500 சிப்காட் தொழிற்சாலைகள், கடலூர் பண்ருட்டியில் 500 சிறுகுறு தொழிற்சாலைகள், ஓசூரில் 2000 தொழிற்சாலைகள் ஆகியவை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள.