#Breaking : தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா! – சுகாதாரத்துறை அறிவிப்பு!

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதால், நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும்

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதால், நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 724 ஆக உயர்ந்து, பலி எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸிலிருந்து 66 பேர் குணமடைந்துள்ளார்கள்.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இதுவரை 29ஆக இருந்து வந்த நிலையில், தற்போது மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதனை தமிழக சுகாதாரத்துறை சார்பாக டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது