தஞ்சையில் மேலும் 17 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா உறுதி.!

Another 17 students in Tanjore have been diagnosed with the corona virus.

தஞ்சையில் மேலும் 17 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து, நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை 1000-ஐ கடந்து வருகிறது. இதன் காரணமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இன்று முதல் 9,10,11 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தஞ்சையில் மேலும் 17 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கெனவே 11 பள்ளிகளில் 168 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மேலும் 12 பேருக்கு பாதிப்பு உறுதியானது.  புதிதாக பள்ளி மாணவர்கள் 12, கல்லூரி மாணவர்கள் 5 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. கும்பகோணம் சரஸ்வதி பள்ளியில் 10, மாரியம்மன் வீதி அரசு பள்ளியில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.