சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 1106 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 1,106 ஆக அதிகரிக்கப் பட்டுள்ளதாக என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 5 நாட்களுக்கு முன் 600 ஆக இருந்த கட்டுப்பாட்டு பகுதி தெருக்களின் எண்ணிக்கை தற்போது 1106 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 173 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்வதால் தெருக்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.