புதிதாக 5,950 பேருக்கு கொரோனா.! – 125 பேர் உயிரிழப்பு.!

தமிழகத்தில் புதிதாக 5,950 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3,38,055 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இன்று ஒரே நாளில் 5,950 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, தமிழகத்தில் மொத்தமாக 3,38,055 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1,196 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் எண்ணிக்கை 1,16,650 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் தமிழகத்தில் இன்று 125 பேர் பலியாகியுள்ளனர். அதில், 39 பேர் தனியார் மருத்துவமனையிலும், 86 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் உயிரிழப்பின் எண்ணிக்கை 5,766 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 6,019 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 2,78,270 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.