தமிழகத்தில் இதுவரை 2.78 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்கள்.!

தமிழகத்தில் இதுவரை கொரோனாவிலிருந்து 2.78 லட்சம் பேர் மீண்டுள்ளார்கள்.
தமிழகத்தில் இன்று புதிதாக 5,950 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,38,055 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 70,450 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை 37,11,246 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று ஒரே நாளில் 6,019 பேர் டிஸ்சார்ஜ் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 2,78,270 பேர் மீண்டுள்ளனர்.
ஒரே நாளில் மேலும் 125 பேர் கொரோனாவால் உயிரிழப்பு. இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,766 ஆக உயர்ந்துள்ளது.