நாடு முழுவதும் ஏப்ரல் 10,11-ம் தேதிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை.!

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று அதிகரித்தாலும் அதற்கான

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று அதிகரித்தாலும் அதற்கான முறையான பரிசோதனைகள் ஏதும் நடக்கவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை செயலாளர்தெரிவித்துள்ளார்.

இன்று ஒரு நாள் மட்டுமே கொரோனா பாதிப்பு 1500-ஐ தாண்டியது, இதனால் மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார துறை அமைச்சகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், கொரோனா பாதிப்புள்ளவர்களுக்கு சுவாச பிரச்சனை அதிகம் உள்ளதாகவும் முடிந்த அளவிற்கு சீக்கிரம் அவர்கள் பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, கொரோனா மற்றும் பருவநிலை மாறுபாடு கரணமாக பரவும் காய்ச்சலை எதிர்கொள்ள நாடுமுழுவதும் ஏப்ரல் 10,11ம் தேதிகளில் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடந்தப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.