டெல்லி :தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் அரசு முறைப் பயணமாக டெல்லிக்கு சென்றுள்ளார். நேற்று மாலை புறப்பட்டு சென்ற அவர் நேற்று இரவு டெல்லி சென்றடைந்தார். அவரை டெல்லியில் உள்ள திமுக எம்பிக்கள், கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பில், அவர் தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள நிதி, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான 2ம் கட்ட நிதி, பள்ளிக்கல்வி சமக்ர சிக்சா திட்டத்துக்கான நிதி போன்றவற்றை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதறகக அதற்கான கோரிக்கை மனுவும் அளித்தார்.
அதன் பிறகு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இல்லத்திற்குச் சென்றார்.
அங்கு நேரில் சென்ற மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், மறைந்த சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதையும் செலுத்தினார்.
