குற்றவாளிகள் தாக்கினால் துப்பாக்கியால் சுடலாம் – டிஜிபி

By

கொலைகளை தடுக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி.

நெல்லை மாவட்டத்தில் காவல் அதிகாரிகளை தாக்கும் சம்பவங்கள் தடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிஜிபி, நெல்லை மாவட்டத்தில் காவல் அதிகாரிகளை தாக்கினால் துப்பாக்கியால் சுட தயங்கக்கூடாது என்றும் நெல்லை மாவட்டத்தில் பழிக்கு பழியாக நடத்தப்படும் கொலைகளை தடுக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது எனவும் தெரிவித்தார்.

நிலையில் கஞ்சா விற்பனை முற்றிலும் ஒளிக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.  மேலும், தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள காவல் நிலையங்களுக்கு 2 பைக் வழங்கப்பட்டுள்ளது. நகைப்பறிப்பு, பைதிருட்டு உள்ளிட்டவற்றை தடுக்க போலீசார் பைக்கில் 24 மணிநேரமும் ரோந்து செல்வர் எனவும் டிஜிபி சைலேந்திரபாபு குறிப்பிட்டுள்ளார்.

Dinasuvadu Media @2023