#Breaking:அதிர்ச்சி சம்பவம்…மீண்டும் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

கடலூர்:ஆண் நண்பருடன் சென்ற இளம்பெண்ணை 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
விருதுநகரில்:
அண்மையில்,விருதுநகரில் 22 வயது பட்டியலின பெண் ஒருவர் திமுக பிரமுகர் மற்றும் அவரது நண்பர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.இதனையடுத்து,குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில்,இந்த வழக்கு பொள்ளாச்சி சம்பவம் போன்று இருக்காது என்றும்,விரைந்து தண்டனை பெற்று தருவதில் இந்தியாவுக்கே முன்மாதிரியாக இருக்கும் என்றும் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்திருந்தார்.
பெண் மருத்துவர்:
அதே சமயம்,வேலூரில் நள்ளிரவு படம் பார்த்து நண்பருடன் ஆட்டோவில் எரிய பெண் மருத்துவரை கடத்தி சென்று நான்கு பேர் கூட்டு பலாத்காரம் செய்தனர்.
மீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை:
இந்நிலையில்,கடலூரில் ஆண் நண்பருடன் சென்ற இளம்பெண்ணை 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது:
அதன்படி,கும்பகோணத்தை சேர்ந்த சதீஷ்(19 வயது),சபரி என்கிற கிஷோர் (19 வயது) உள்ளிட்ட 3 பேரை கைது செய்து திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும்,பெண்ணின் ஆண் நண்பரிடமும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இவ்வாறு தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பெண்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025