ஜூலை 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கை நீடித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு.
தமிழகத்தில் கொரோனா தொற்றியின் பரவல் குறைந்து வரும் நிலையில், ஏற்கனவே பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில், இன்று காலை முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில், ஊரடங்கு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், புதிய தளர்வுகள் இன்றி தமிழகத்தில் ஆகஸ்ட் 9ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே, இருந்த தளர்வுகளுடன், கூடுதல் தளர்வுகள் இன்றி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளை சரியான முறையில் பின்பற்றவிலை என்றால் அதன் விளைவிகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த ஊரடங்கில் புதிய தளர்வுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை, தியேட்டர்கள், மதுக்கூடங்களை திறக்க தடை தொடர்கிறது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த ஆட்சியர்கள் மற்றும் காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…