மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்கக் கோரி சைபர் க்ரைம் போலீசார் கடிதம்!

நடிகை மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்கக் கோரி யூடியூப் நிறுவனத்திற்கு மத்திய பிரிவு போலீசார் கடிதம்.
நடிகை மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்கக் கோரி யூடியூப் நிறுவனத்திற்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர். பட்டியலினத்தவர்களை அவதூறாக பேசிய சர்ச்சையில் மீரா மிதுன் கைதாகி சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
இதனிடையே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி வன்னியரசு அளித்த புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது சென்னை சைபர் க்ரைம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்ற காவலில் உள்ள நடிகை மீரா மிதுன் காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல், மாற்றி மாற்றி பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மன நல ஆலோசகர் முன்னிலையில் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற சைபர் கிரைம் போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025