மதுரையில் 22 கோவில்களில் தரிசனம் ரத்து..!

Devotees banned from seeing Swami in 22 temples in Madurai district.

மதுரை மாவட்டத்தில் 22 கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு தடை.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னை,திருச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள பிரசித்திபெற்ற கோயில்களில் ஆகஸ்ட் 2 முதல் 8 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் 22 கோவில்களில் தரிசனத்திற்கு தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் அழகர்கோவில், பழமுதிர்சோலை, வண்டியூர் மாரியம்மன், பாண்டி முனீஸ்வரர் உட்பட 22 கோயில்களில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் குவிந்ததால் மதுரை மாட்டுத்தாவணை மலர் சந்தையை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.