அலையில் சிக்கிய மகள்., காப்பாற்றச் சென்ற தந்தை., கரை ஒதுங்கிய சடலம்!

The body of a father who went to rescue his daughter who was stranded in a sea wave in Thiruvanmiyur has caused great grief.

கடல் அலையில் சிக்கிய தனது மகளை காப்பாற்ற சென்ற தந்தையின் உடல் கரை ஒதுக்கியது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவான்மியூர் கடலில் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த 11 வயது மகளை கரையில் இருந்து தந்தை பாலாஜி கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது, தனது மகள் ராட்சத அலையில் சிக்கியதை கண்ட தந்தை காப்பாற்ற சென்றுள்ளார்.

கடலில் தத்தளித்த அந்த 11 வயது சிறுமியை மீனவர்கள் கடும் போராட்டத்தில் மீட்டனர். ஆனால், மகளை காப்பாற்ற சென்ற தந்தை ராட்சத அலையில் சிக்கிக்கொண்டார். சிறிது நேரத்தில் அவரது சடலம் கரை ஒதுங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.